புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

விவாகரத்தான சுவிஸ் இளம்பெண்ணிடம் ‘வட்சப்’ மூலம் லீலைகள்!! பணம் கறந்த யாழ் அரச அலுவலர்!!

 

யாழ் வலிகாமம் உள்ள அரசஅலுவலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் 32 வயதாக குடும்பஸ்தர், சுவிஸ்லாந்தில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட விவாகரத்தான 37 வயதான குடும்பப் பெண் ஒருவரிடம் வட்சப் மூலமான தொடர்பினைப் பேணி லட்சக்கணக்கான பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளதாக குறித்த குடும்பப் பெண் ஊடகங்கள் சிலவற்றுக்கு தகவல்கள் அனுப்பியுள்ளார். குறித்த உத்தியோகத்தர் சுவிஸ் பெண்ணிடம் தன்னையும் விவாகரத்தானவர் என கூறியே தொடர்பைப் பேணியுள்ளார்.

அறக்கொடை நிறுவனம் ஒன்றில் பிரதான பங்காளராகக் காட்டிக் கொள்ளும் குறித்த அலுவலர் தனது பேஸ்புக்கில் வறுமையில் வாடும் குடும்பம் ஒன்று தொடர்பாக விபரங்களைப் போட்டுள்ளார். அது மற்றவர்களால் பகிரப்பட்ட போது அந்த பதிவை பார்த்த சுவிஸ் பெண் அந்த குடும்பத்தரை முதல் முதல் பேஸ்புக்கில் தொடர்பு கொண்டதாகவும் அதன் பின்னரே இருவரும் நெருங்கிய தொடர்புகளைப் பேணியதாகவும் தெரியவருகின்றது. தானும் திருமணம் முடித்து விவாகரத்துச் செய்துவிட்டதாகவும் குறித்த அலுவலர் சுவிஸ் பெண்ணுக்கு கூறியுள்ளார். தனது வயோதிபத் தாயை தரக்குறைவாக தனது மனைவி நடத்த தொடங்கியதாலேயே தான் விவாகரத்து செய்ததாகவும் சுவிஸ் பெண்ணுக்கு பீலா விட்டுள்ளார். இவற்றை நம்பிய பெண் குறித்த குடும்பஸ்தருக்கு 25 லட்சம் ரூபா அளவில் கொடுத்துள்ளதாக கூறி அவற்றுக்கான ஆதாரங்களையும் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதாக கூறியே அப் பணத்தை அலுவலர் வாங்கியதாக பெண் குறிப்பிட்டார். இந் நிலையில் சுவிஸ் பெண்ணின் உறவினரான சாவகச்சேரியைச் சேர்ந்த இன்னொரு பெண்ணிடம் குறித்த குடும்பஸ்தர் தொடர்பாக சுவிஸ் பெண் கூறி வந்துள்ளார். சாவகச்சேரியைச் சேர்ந்த பெண்ணின் புலனாய்வு நடவடிக்கையின் மூலமே குறித்த அரச அலுவலர் திருமணம் முடித்து 2 குழந்தைகளுக்கு தந்தை எனவும் அவர் தனது மனைவியுடன் சந்தோசமாக வாழ்வதும் அவரது மனைவியும் ஆசிரியையாக உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் சுவிஸ்பெண் அலுவலருடன் தொடர்பு கொண்டு விசாரணை செய்த போது அவர் அதனை ஒத்துக் கொண்டுள்ளதுடன் குறித்த பணத்தை தனது சொந்தத் தேவைக்குப் பயன்படுத்தியதையும் ஒப்புக் கொண்டுள்ளார், இதனால் எரிச்சலுற்ற குறித்த சுவிஸ் பெண் ஊடகங்களுக்கு அரச அலுவலர் தொடர்பான விபரங்களை அனுப்பியுள்ளார்.

குறித்த அரச அலுவலருடன் தொர்பு கொண்டு கேட்ட போது அவர் தான் செய்த லீலைகளை ஒப்புக் கொண்டுள்ளார். அத்துடன் சுவிஸ் பெண் தன்னிடம் அனுப்பிய காசைக் கேக்காது தனது மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டு அதன் பிரதியை தனக்கு அனுப்புமாறும் தன்னை திருமணம் முடிக்குமாறும் வற்புறுத்தியதாகவும் கூறி அதற்கான ஆதாரங்களையும் எமக்கு அனுப்பியுள்ளார். இரு குழந்தைகள் இருப்பதையும் மறைத்து இன்னொரு பெண்ணுடன் லீலைகள் புரிந்த குடும்பஸ்தரையும் விட அப்பாவிப் பெண்ணை நடுத்தெருவில் விட்டுவிட்டு தன்னுடன் வருமாறு கூறிய சுவுிஸ் பெண்ணும் அலங்கோலமானவர் எனக் கருதி நாம் இருவரது ஆதாரங்களையும் இங்கு பதிவிடாது தவிர்த்துள்ளோம்.

இனிவரும்காலம் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவர்கள் தொடர்பாக அனைவரும் விளிப்புணர்வாக இருக்க அறிவுறுத்துகின்றோம்.