புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியிலுள்ள வீடு ஒன்று சுற்றிவளைப்பு..!!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியிலுள்ள வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், விசேட தேடுதல் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் குறித்த வீடு சுற்றிவளைப்பட்டுள்ளது.

நேற்றிரவு இரவு 11 மணியளவில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்போது ஆயுதங்கள் எவையும் மீட்கப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் வீட்டுக்கு அருகிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கூரிய வாள் ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து குறித்த வாள் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்து வருகின்றனர்