யாழில் தனிமையிலிருந்த பாட்டி கொடூரமாகக் கொலை !!
வீட்டில் தனித்திருந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மூதாட்டியின் கழுத்தில் காணப்படும் அடையாளத்தை வைத்தே கழுத்து நெரித்து அவர் கொலை
செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், அவர் அணிந்திருந்த நகை
மற்றும் வீட்டிலிருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது என உறவினர்கள் தெரிவித்தனர் எனவும் கூறினர்.
தெல்லிப்பளை மகாதனையைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கமலாதேவி (வயது -70) என்ற மூதாட்டியே
கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மூதாட்டியின் வீட்டுக்கு இன்று காலை சென்ற உறவினர்கள், அவர் சடலமாகக் காணப்பட்டார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.