புதினங்களின் சங்கமம்

யாழ் கோப்பாயில் கோர விபத்து!! டிப்பர் மோதி பொலிஸ் அதிகாரியின் மனைவி பலி!! திட்டமிட்ட கொலையா?? (Video)

யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோப்பாய் சந்திப்பு பகுதி பிராதன வீதியில் மோட்டார் சைக்கிளில் கணவன்-மனைவி பயணித்துக் கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விபத்துக்குள்ளாகியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற, உயிரிழந்த பெண்ணின் கணவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு சென்ற கோப்பாய் பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு விபத்தில் சிக்கியவர் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்கதர் எனவும், அவரது மனைவியே விபத்து சம்பவத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும்  பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொடிகாமம் பகுதியில் பாரிய மண்கடத்தல்களில் ஈடுபடும் ரவுடிகள் டிப்பர் வாகனத்தின் மூலம் இவ்வாறான  செயற்பாட்டை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

May be an image of one or more people, people standing and roadMay be an image of 2 people, motorcycle, road and text that says "Nirujan"May be an image of 1 person, road and text that says "Nirujan"May be an image of one or more people and outdoorsMay be an image of 1 person, standing and outdoors