புதினங்களின் சங்கமம்

ரணிலுடன் கடும் நெருக்கமா?? யாழ் பல்கலை துணைவேந்தரை பதவியிலிருந்து கலைத்தார் ஜனாதிபதி!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடன் நடைமுறைக்கு
வரும் வகையில் துணைவேந்தர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர்
கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 30ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தில் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமையவே இந்த பதவி
நீக்கப்படுவதாக ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை அந்தப்
பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16
ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப்
பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்
துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம்
மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து
நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனுக்கு
முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும்,
நேற்று மே மாதம் 5ஆம் திகதி பின்னிரவே தொலைநகல் மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு
அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாகப்
பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். சறீசற்குணராஜா அல்லது யாழ். பல்கலைக்கழகத்தின்
முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஆகிய இருவரில் ஒருவரை
யாழ்ப்பாண புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்படும் வரை பல்கலைக்கழகத்தின்
அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிப்பதற்கான பரசீலனைகள் இடம்பெற்றுவருவதாக
அறியவருகின்றது.

இதேவேளை, காரணமேதுமின்றி பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை மீளப் பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை ரணிலுடன் மிகவும் நெருக்கமான உறவினைப் பேணிவந்ததாலேயே இவரை ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கியுள்ளதாக யாழ்  பல்கலைக்கழக வட்டாரங்கள் சில தெரிவித்துள்ளன.