குண்டுடன் பிடிபட்ட வன்னி தாவூத் ஹோட்டல் உரிமையாளனுக்கு பொலிஸ் நிலையத்தில் ராஜமரியாதை!!
இலங்கையின் சிறைக்கூடங்கள் அமெரிக்க தரத்துக்கு முன்னேறியிருக்கின்றமைக்கு எடுத்துக்காட்டுத்தான் இந்தப் புகைப்படம். கடந்தவாரம் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட கனராயன்குளம் தவூத் ஹோட்டலின் உரிமையாளர், சிறைகூடத்துக்குள் நிம்மதியாக ஓய்வெடுக்க பாய், தலையணை, சுடுதண்ணீர் போத்தல் முதலானவை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையின் சிறைகளில் கைதிகள் மோசமாக சித்திரவதைக்குள்ளாகின்றனர் என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில், இந்த புகைப்படம் ஒன்றே அக்குற்றச்சாட்டை அடித்துநொறுக்க போதுமானதென நண்பர் ஒருவர் குறிப்பிட்டார். மிக அபாயகரமான வெடிபொருட்கள் சார்ந்த குற்றச்சாட்டுக்காக கைதான ஒருவருக்கே இவ்வளவு வசதி வாய்ப்புக்களை இலங்கை சிறைச்சாலைகள் வழங்குகின்றதெனில், மிகச் சாதாரணமான புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக பயங்கரவாத சட்டம், அவசரகால தடைச்சட்டம் முதலான சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஏ.சி சிறைகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக அந்த நண்பர் மேலும் குறிப்பிட்டார்.