4 வயது குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த நபர் பிணையில் விடுதலை!
4 வயது குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞனை ஒரு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் 4 வயது குழந்தைக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து அதனை காணொளி பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார், குழந்தையை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து குழந்தையின் மனநிலை குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள எதிர்ப்பார்த்துள்ளதாகவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

