கார்கில் பூட்சிற்றி வாடிக்கையாளர்களுக்கு செய்யும் அநியாயம்!!
பெயர் சொல்ல விரும்பாத சாமானிய மக்களில் ஒருவர் (எனக்கு தெரிந்தவர்) இலங்கையின் மிகப்பெரிய லாபமிட்டும் அங்காடியான (FOODCITY) வர்த்தக நிலையத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சென்றுள்ளார். இது பயணத்தடை விதிக்கப்பட்ட காலம் என்றாலும் மனித பசிக்கு தடை விதிக்க முடியாது, தனது வீதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடிய நிலையில், FOODCITY போன்ற நிறுவனங்கள் தனது அத்தியாவசிய சேவைகளை செய்து வருவது அறிந்து வீட்டுக்கு அருகில் இருக்கிறது என்ற படியால் அவர் நேரடியாக சென்று தனக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றுள்ளார்.
ஆச்சர்யம் அங்கு அவருக்கு பொருட்களை வாங்க அவர்கள் அனுமதித்துள்ளதுடன். அவரை வெளியே இருக்க வைத்துவிட்டு அவர் கூறிய பொருட்களை அவர்கள் கொண்டுவந்து கொடுத்துள்ளனர்.
இந்த காலத்தில் பொருட்களை அவர்களுக்கு விற்பனை செய்வதன் காரணத்தினால் நேரடியாக வந்து பொருட்களை பெற்றாலும் DELIVERY CHARGES என்ற பெயரில் அவரிடம் 200 ரூபாய் வாங்கியுள்ளனர். அது அவருக்கு கொடுக்கப்பட்ட BILL இல் சேர்க்கப்பட்டுமுள்ளது.
இது தொடர்பில் அவர் கேட்டபொழுது அவருக்கு அவர்கள் கூறிய பதில்,
நாங்கள் உங்களுக்கு பொருட்கள் விற்க கூடாது ,நாங்கள் DELIVERY SERVICE மட்டும் தான் செய்ய வேண்டும், ஆகவே நேரில் வாங்க வந்தாலும் நாங்கள் DELIVERY செய்ததாகவே கணக்கிடுவோம் அதற்க்காக 200 ரூபாய் நீங்கள் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். வேறு வழியின்றி அவர் அந்த பொருட்களை மேலதிகமாக 200 ரூபாய் கொடுத்து வாங்கி வந்துள்ளார். ..
(பாமர மக்கள் பலருக்கு DELIVERY SERVICE
என்பது இன்னும் புரியாத விடயம் தான்
அதே போன்று 200 ரூபாய் அவர்களுக்கு மிகபெரிய தொகையே)
பின்னர் என்னை தொடர்பு கொண்டு இது தொடர்பில் தெரியபடுத்தினார்.
நான் இது தொடர்பில் எனக்கு தெரிந்த அந்நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் ஒருவரிடம் வினவிய பொழுது
அவருக்கு பொருட்கள் கொடுத்தது பெரிய விடயம்.. யாருக்கு விற்றாலும் 200 ரூபாய் நாங்கள் வாங்குவோம். நீங்கள் வேணும் என்றால் வீட்டில் இருந்தே ORDER செய்துருக்கலாம் நாங்கள் கொண்டு வந்து தந்திருப்போம் அதற்கு 200 ரூபாய் CHARGE செய்திருப்போம் என்று கூறினார். அவர் நேரில் வந்து வாங்கினாலும் அவர் உள்ளே வர முடியாது என்ற படியால் எங்கள் ஊழியர்கள் அவர் கூறிய பொருட்களை எல்லாம் தேடி எடுத்து வந்து கொடுத்ததால் நாங்கள் 200 ரூபாய் CHARGE செய்தோம் என்று கூறினார்.
நிகழ்காலத்தில் மக்கள் வீடுகளில் முடங்கி அல்லல் பட்டு கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் வயதானவர்கள் என பலரும் வேறு வழியின்றி வீட்டில் உள்ளே வாழ்ந்து வருகிறார்கள் கிட்ட தட்ட 3 வாரமாக பயணத்தடை உள்ளதால் வீட்டில் உள்ள பொருட்கள் முடிந்ததால் அதை வாங்க அருகில் உள்ள பல்பொருள் அங்காடியான FOODCITY கு சென்றுள்ளார்.
அவர் ஏன் சென்றார் என்று கேட்கிறார்கள் சிலர் அந்தளவுக்கு நிகழ் காலத்தில் மனிதம் செத்து கிடக்கிறது.
FOODCITY போன்ற மிகப்பெரிய நிறுவனங்களுக்கு 200 ரூபாய் பெரிய தொகை அல்ல ஆனால் இப்படி ஒவ்வொரு வாடிக்கையாளர்களிடம் இந்த காலத்தில் நீங்கள் பணம் பறிப்பது வரிப்பழி கொள்ளைக்கு சமம்.
சாமானிய மக்களையும் அவரகளின் வாழ்க்கை நிலையையும் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.. பணம் மட்டும் வாழ்க்கை அல்ல.
மனித பசியை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ளாதீர்கள். பயணத்தடை விதித்தாலும் பல மக்கள் வெள்ளம், பசி பட்டினி, என்று சொல்லனா துயரில் வாடுகிறார்கள் ,உங்கள் போன்ற வர்த்தக நிலையங்கள் இப்படி நடப்பது அதுவும் இந்த கால கட்டத்தில் வெட்க கேடானது
என்னிடம் அவர் கூறியது நான் அவர்களிடம் பொருட்களை வாங்கி விட்டு நடந்து வரும்போது என்னை நோக்கி ஒருவர் (பிச்சைக்காரர்) காசு கேட்டு கையை நீட்டினார் வழமையாக நான் 05 ரூபாய் 10 ரூபாய் அவர்களுக்கு கொடுப்பேன் அந்த தருணத்தில் இன்னும் ஒரு 100 ரூபாய் அதிகமாக அவருக்கு கொடுத்தேன். காரணம் என்னிடம் அதிக பணம் இருக்கிறது என்று அல்ல. நானும் ஒரு சாமானியன் தான். நான் அவருக்கு கொடுத்த 100 ரூபாய் தர்ம கணக்கு
உள்ளே ஒருவரிடம்(FOOD CITY) க்கு அவருக்கு முன்மாகவே பிச்சையாக 200 ரூபாய் போட்டு விட்டேன் என்று மனதில் நினைத்து விட்டு வந்துவிட்டேன் என்று கூறினார்.
இனிமேல் ஆவது திருந்துங்கள்
உங்கள் நற்பெயரை கெடுக்காதீர்கள்
மக்கள் சேவை மக்களுக்கானது வியாபார தந்திரத்திற்கானது அல்ல.
நன்றி… இது Lavendren Jananayagan
அவர்களின் பேஸ்புக் பதிவாகும்….



