யாழ் பள்ளிவாசல் முற்றுகை..! 14 பேருக்கு கட்டாய தனிமைப்படுத்தல்..

யாழ்.ஐந்துசந்தி பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை
மீறி தொழுகையில் ஈடுபட்டிருந்த 14 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்.ஐந்து சந்திப்பகுதியில் பயணத் தடை வேளையில் முஸ்லிம் பள்ளி ஒன்றில் தொழுகையில்
ஈடுபட்ட 14 பேர் அப்பகுதி சுகாதார பிரிவினரால்எதிர்வரும் 14 நாட்களுக்கு சுய
தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடுவது வீதியில் பயணிப்பது தடை
செய்யப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் உள்ள பச்சை பள்ளியில்
தொழுகையில் ஈடுபட்டவேளை

யாழ்.பொலிஸார் மற்றும் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரின் விசேட சுற்றுக்காவல்
நடவடிக்கையின்போது தொழுகையில் பங்கு பற்றிய சிலர் வீடுகளிலும் சிலர் பள்ளியிலும்
தனிமைப்படுத்தல உட்படுத்தப்பட்டுள்ளனர்.

May be an image of motorcycle and road

error

Enjoy this blog? Please spread the word :)