புதினங்களின் சங்கமம்

விசர் முத்திய நிலையில் பைத்தியர் அர்ச்சூனாவின் திருகுதாளங்கள்!!

மைந்தன் சிவா என்னும் சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

சம்பவம் : எனக்கு உயர்மட்ட அழைப்பு வந்திருக்கிறது. சந்திப்புக்காக கண்டி செல்கிறேன். சஜித் தான் நமக்கான தீர்வு. அவருக்காக இறங்கி வேலை செய்யப்போகிறேன். என் ரசிகர்கள் வாருங்கள்.

உண்மை : இவரின் கூத்துகள் அறிந்ததால், சஜித்தின் பொறுப்பாளர்கள் யாரும் கணக்கில் எடுக்காத நிலையில், விசயம் தெரியாத மலையக எம்பி ராதாகிருஷ்ணனை அணுகி, தன்னை சஜித்துடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுங்க என்று இடைவிடாது தொந்தரவு கொடுத்திருக்க்கிறார்.

தொந்தரவு தாங்க முடியாம சரி கண்டி வா, உன் ஆதரவை- பிரச்சனையை கடிதமாக கொண்டு வா சஜித்திடம் கொடுக்க ஒரு நிமிடம் ஒதுக்கி தருகிறேன் என்று கூற, கண்டி சென்ற அர்ச்சூனாவிற்கு சஜித்தை சந்திக்க முடியவில்லை. அவர் ஏலவே கண்டி கூட்டத்தை முடித்து திருகோணமலை நோக்கி பயணப்பட்டுவிட்டார்.

பின் திருகோணமலைக்கு வா , வந்து மாநாடு முடிந்ததும் சில நிமிடம் சந்தித்து உன் ஆதரவு கடிதத்தை கொடு என்று சொல்ல,

நான் திருகோணமலை கூட்டத்திற்கு தமிழ் முஸ்லீம் மக்கள் பிரதிநிதியாகச் செல்கிறேன். மேடையில் பேசச்சொன்னால் பேசுவேன் என்று தன் வழமையான உருட்டுகளுடன் பேஸ்புக் வெங்காயங்களுக்கு உருட்டி விட்டு அங்கு சென்றால்,

அங்கு obviously இவருக்கு மேடையில் இடமில்லை. ஆனால் தான் ஓடிப்போய் மேடையில் ஏறி ஒரு கதிரையில் உட்காருகிறார்.

யார் இந்த அழையா விருந்தாளி என்று ஏற்பாட்டாளர்கள் திகைத்து, சஜித்தின் வடக்க்குக்கான பொறுப்பாளர் உமா சந்திர பிரகாஷிடம் விசாரித்து, அவரை மேடையை விட்டு இறக்குகிறோம் என்று இறக்கி அனுப்பியிருக்கிறார்கள்.

பின் சஜித்தை ஒரு சில நிமிடம் சந்தித்த அர்ச்சூனாவை சஜித், எனக்கு யாரும் ஆதரவு தரலாம். ஆதரவு தர விரும்பினால் நீங்கள் யாழில் என் அமைப்பாளர் உமா சந்திராவுடன் இணைந்து உதவி செய்யுங்கள் என்றிருக்கிறார்.

அதை, எதோ யாழ் அமைப்பாளராக தன்னை போட்டார்கள் என்று மீண்டும் பேஸ்புக் எருமைகளுக்கு உருட்டிவிட்டு யாழ் வந்திருக்கிறார் அர்ச்சூனா.

——-

இதுதான் நடந்தது.

1. இவரை யாரும் சந்திக்க அழைக்கவில்லை- தானாக வற்புறுத்தி சந்திக்க நேரம் கேட்டு தொந்தரவு செய்தார்.

2. யாரும் மேடை ஏற்றுவதாக சொல்லவில்லை- தான் தனது கனவுலகில் மேடை ஏறி பேசுவதாக நினைத்து உருட்டியிருக்கிறார்

3. முஸ்லீம்கள் மேடை இதில் தமிழன் வேண்டாம் என்று சஜித் சொல்லவில்லை. அது இவன் தன் அஜெண்டாவுக்காக உருட்டிய மகா உருட்டு. மக்களை பேயன்கள் ஆக்குகிறான். தேர்தல் இறுகிப்போய் இருக்கும் தருணத்தில் இனப் பிரிவுக்கான கருத்துகளை வேட்பாளர்கள் சொல்ல வாய்ப்பே இல்லை. அதுவும் திருகோணமலையில். Common sense.

இப்போது எல்லாம் backfire ஆக,

1. இதுவரை தமிழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதி என்று உருட்டியவன் இன்று தமிழருக்கு மட்டும்தான் என்கிறான்.

2. சஜித்தை நேற்று இரவு புகழ்ந்தவன், இன்று சஜித் கட்சி உதவாது என்கிறான்.

முழுப் பைத்தியக்காரன் இந்த பைத்திய வைத்தியர். ஒரு கொள்கையும் இல்லை மண்ணும் இல்லை. காலமை ஒரு கொள்கை மதியம் இன்னொண்ணு. இரவு முற்றிலும் வேறான கொள்கை. பைய்தியக்கார கூத்துகள் மட்டும் அளவில்லை.

இவனின் முழு எண்ணமும்,

வரும் ஐந்தாம் ஆறாம் தேதிகளில் வசமாக லொக் ஆகிய கோர்ட் கேஸுகளுக்கு முன்பாக அரசியல் பலமொன்றை பெற்று அதன் மூலம் தப்பிக்கப் பார்ப்பது.

அது ரணிலுடன் பிழைத்து
அனுரவுடன் ஒரு அக்கா கிழித்து தொங்கவிட்டு பிழைத்து
இறுதியாக சஜித்துடனும் பிழைத்துவிட்டது.

இனி இன்னொரு வரைட்டியா ஏமாத்தி லைவ் வருவான். நம்ம ஆப்பாயில் புன்னகைகளும் பூத்தூவி வரவேற்கும்.

சில வாரங்கள் முன் சொன்னது போல் இவன் ஒரு அரசியல் ஏஜண்ட். அதுவும் தன் நலனுக்காக பேஸ்புக் மக்களை பாவிக்கும் ஏஜெண்ட். சுகாதார அமைச்சில் உயர் பதவி- சில பல கோடிகள்- அமைப்பாளர் பதவிகள் என்று பேசிய டீல்கள் அனைத்தும் சொதப்பிப் போக

இனி புது உருட்டுடன் இறங்குவான்.

ஒருசிலர் விழித்துவிட்டார்கள். அதனால் அவர்களை ப்ளாக் பண்ணிவிட்டான்.இனியும் ஏனையோர் உசார் ஆகாவிடின்,

ஒன்றும் பிரச்சனை இல்லை. சீக்கிரம் விழிப்பீர்கள்!