யாழில் கடும் சூறைக் காற்று!! பனை வீ்ட்டின் மீது வீழ்ந்து பச்சிளம் குழந்தை படுகாயம்!!
யாழ்ப்பாணம் உட்பட வட பகுதியில் கடும் சூறைக்காற்று வீசி வருகின்றது. பல இடங்களிலும் மரங்கள் முறிந்து வீழ்கின்றன. அத்துடன் வீட்டுக் கூரைகளும் துாக்கி வீசப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. அத்துடன் காரைநகர் சிவகாமி அம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டின் மேல் பனை முறிந்து விழுந்ததால் இரண்டரை வயதுக் குழந்தை படுகாயமடைந்துள்ளது.
https://vampan.net/29476/
குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் கிரிபாலன் கஸ்மிலா (வயது 2 1/2) என்ற குழந்தையே இவ்வாறு படுகாயமடைந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குழந்தை வீட்டினுள் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த வேளை பலத்த காற்று வீசியதன் காரணமாக வீட்டிற்கு அருகே இருந்த பனை ஒன்று அடியோடு பெயர்ந்து வீட்டிற்கு மேல் விழுந்துள்ளது. இதனால் குழந்தை படுகாயமடைந்துள்ளது.
இதனையடுத்து குழந்தை வலந்தலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அம்புலன்ஸ் மூலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது.



வீசிவரும் கடும் காற்றினால் மின் கம்பத்தின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததால் கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட ஐந்து கிராமங்களுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் குறித்த கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன.
இன்று மாலை பலத்த காற்று வீசியதால் புலோப்பளை பிரதான வீதியில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பம் மீது தென்னைமரம் முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனை அடுத்து அறத்திநகர், அல்லிப்பளை, புலோப்பளை கிழக்கு, மேற்கு, அரசன்குடியிருப்பு ஆகிய கிராமங்களுக்குரிய மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
தற்போது வரையில் (இரவு 9.30) அந்தக் கிராமங்களுக்கான மின்சாரம் கிடைக்கப்பெறாமையால் மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

