கோப்பாய் பகுதியில் பயணத்தடையிலும் சாராயம் விற்ற சாராயக்கடைக்கு நேர்ந்த கதி!!
யாழ்.கல்வியங்காடு பகுதியில் மதுபானசாலை முற்றுகை..! மதுபானம் வாங்கவந்தவர்கள்,
விற்றவர்கள் அனைவரும் கைது, பெருமளவு மதுபானம் பறிமுதல்..
யாழ்.நல்லுார் பின் வீதியில் இராமசாமி பரியாரியார் சந்தியை அண்மித்த பகுதியில் உள்ள
மதுபானசாலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு பெருமளவு மதுபானம் மீட்கப்பட்டதுடன்,
மதுபானம் வாங்க வந்தவர், விற்றவர் என அனைவரும் கைது செய்யப்பட்டள்ளனர்.
நாட்டில் பயணத்தடை தளர்த்தப்பட்டுள்ளபோதும் மதுபான விற்பனை நிலையங்களை திறக்க தடை
விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த மதுபான விற்பனை நிலையத்தில் இரகசியமாக
மதுபானம் விற்பனை செய்யப்பட்டுவந்துள்ளது.
குறித்த விடயம் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நிலையில் மதுபானசாலையை பொலிஸார்
முற்றுகையிட்டபோது மதுபானம் வாங்க வந்திருந்த ஒருவர் மற்றும் மதுபானசாலை முகாமையாளர்,
மற்றும் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 100 கால் போத்தல்கள், 4 முழு போத்தல்கள், 8 பியர்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. கைது
செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மதுபான சாலையில் பயணத் தடை விதிக்கப்பட்டபோது மதுபானசாலைகள் மூடப்பட்டிருந்த
நிலையில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

