புதினங்களின் சங்கமம்

யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர், செயலாளர் சற்று முன் யாழ் நீதவான் முன் ஆயர்!!

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடந்த சுற்றிவளைப்பு  தேடுதலின் போது புலிகளின் தலைவரின் புகைப்படங்கள் மற்றும் தொலைநோக்கி ஆகியன கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர் மற்றும் செயலாளர் சற்று முன் யாழ் நீதவான் முன் ஆயர்ப்படுத்தப்பட்டனா.

 

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரை வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும்
பொலிஸாரால் இன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், மாவீரர்களின் ஒளிப்படங்கள் மற்றும் தமிழீழ வரைபடம் என்பன கைப்பற்றப்பட்டன.

அதனையடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் இன்று இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினர் சார்பில் சட்டத்தரணிகள் கேசவன் சயந்தன், கலாநிதி குமாரவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஷ் ஆகிய மூவரும் முற்பட்டனர்

Image may contain: 1 personImage may contain: 1 personImage may contain: one or more people