Home புதினங்களின் சங்கமம் யாழில் மண்கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்கு ஹெலிகப்டர்கள்!! கோப்பாயில் சுற்றியது ஏன்??

யாழில் மண்கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்கு ஹெலிகப்டர்கள்!! கோப்பாயில் சுற்றியது ஏன்??

யாழ்ப்பாணம், வலிகாமத்தில் உலங்குவானூர்தி மூலம் உளவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக விமானப் படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப் படையால் வழமையாக இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நகரில் இன்று மாலை 4.30 மணியளவில் விமானப் படையின் உலங்குவானூர்தி சுமார் 15 நிமிடங்கள் வட்டமிட்டது. அத்துடன், கோப்பாய், அச்சுவேலி உள்ளிட்ட பிரதேசங்களிலும் உலங்குவானூர்தி வட்டமிட்டது.

இதுதொடர்பிலேயே தரையில் இடம்பெறும் போதைப்பொருள் மற்றும் மணல் கடத்தல் நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பில் விமானப்படை ஓர் சீரான கால இடைவெளியில் வானிலிருந்து உளவு நடவடிக்கையை முன்னெடுப்பது வழமை என்று தெரிவிக்கப்பட்டது.