தமிழ்த் திரைப்பட நடிகர் விஜயகாந் மூச்சுத்திணறல் காரணமாக தீவிர கிசிசைப் பிரிவில் அனுமதி!

தே.மு.தி.க. தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு சென்னை மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவ நிபுணர்களின் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறது. அவரது உடல் நிலை சீராக உள்ளதாக தே.மு.தி.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரிரு நாட்களில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த கடந்த 2 ஆண்டுகளாக சினிமா மற்றும் கட்சி செயற்பாடுகளில் இருந்து பெரும்பாலும் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

கடந்த செப்டம்பர் -23 ஆம் திகதி கொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந் லேசான அறிகுறிகளுடன் 10 நாட்கள் மருத்தவமனையில் சிகிச்சை பெற்று ஒக்டோபர் 2-ஆம் திகதி குணமடைந்து வீடு திரும்பியமையும் குறிப்பிடத்தக்கது.

error

Enjoy this blog? Please spread the word :)