கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் மீது தாக்குதல்!
கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான அவர் தலையில் காயமடைந்திருப்பதாக தெரியவருகிறது.
தனிப்பட்ட காரணங்களால் குறித்த தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளமுடியாமையால் சம்பவத்திற்கான காரணத்தினை உறுதிப்படுத்த முடியவில்லை.
