புதினங்களின் சங்கமம்

பலாலி விமானநிலைய ஊழியர் யாழ் கோணடாவிலில் மர்மமான நிலையில் சடலமாக மீட்பு!!

 

கோண்டாவிலில் வீடொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலைய தீயணைப்பு உத்தியோகத்தர்களின் தங்குமிடத்தில் இருந்தே சடலம்
மீட்கப்பட்டுள்ளது.

விமான நிலைய தீயணைப்பு ஊழியரான பிரேமதிலக (44) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு சக நண்பர்களுடன் மது அருந்தி விட்டு உறக்கத்திற்கு சென்றவர், இன்று காலையில்
சடலமாக காணப்பட்டுள்ளார்.

அவரது மரணத்திற்கு காரணத்தை கண்டறிய பரிசோதனைகள் நடந்து வருகிறது.