புதினங்களின் சங்கமம்

யாழில் கஞ்சா அடித்துக் கொண்டிருந்த ஆவா குழு வாள் வெட்டுக் காவாலி கைது!!

யாழ்.ஈச்சமெட்டை பகுதியில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இளைஞர் பொலிஸாரினால் கையும்
மெய்யுமாக பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த காலங்களில் யாழில் நடைபெற்ற பல்வேறு சமூகவிரோத செயற்பாடுகள் மற்றும் வாள்வெட்டுச்
சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால்
விடுவிக்கப்பட்ட இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணப் பொலிஸார்
தெரிவித்தனர்.

ஈச்சமெட்டை பகுதியில் நேற்று இரவு பொலிஸார் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது
இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப் பொருளை நுகர்ந்து கொண்டு இருந்த போது மடக்கிப்
பிடிக்கப்பட்டுள்ளார். பிடிக்கப்பட்டவரிடம் நடத்திய சோதணையின் போது அவரிடம் இருந்து
மேலதிகமாக 30 மில்லிகிராம் கஞ்சா போதைப் பெர்ருளினையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சான்றுப் பொருளுடன் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைக்காக யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளார். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு
உட்படுத்தப்பட்ட குறித்த இளைஞர் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுத்தப்பட்டுள்ளார்.

குறித்த நபர் விசாரணையின் முடிவில் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என்று
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.