புதினங்களின் சங்கமம்

மட்டக்களப்பில் மூச்சு விடமுடியாமல் துடிதுடிக்கும் யுவதி!! அதிர்ச்சி வீடியோ

மட்டக்களப்பு வைத்தியசாலையில் இளம் பெண் ஒருவர் அவதியுறும் காணொளி முகநூலில் அதிகம் பகிரப்படுகிறது: கிழே இணைப்பு உள்ளது…..

 

இச் சம்பவம் தொடர்பாக வைத்தியர் விஷ்ணு அவர்கள் தரும் விளக்கம்

வைத்தியர் விஷ்ணு அவர்களின் முகநூல் பதிவு
உண்மையை அறிவோம்!
இவ்வாறானதொரு வீடியோ பதிவு ஒன்று நேற்றைய தினம் பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இருந்தது. இதைப் பற்றி பலரும் என்னிடம் கேட்டதினால் இப்பதிவை எழுதுகிறேன்.

உண்மையிலேயே இவர் ஒரு கொரோனா நோயாளியாக இருந்தாலும், அவருக்கு ஏற்பட்ட இந்த வலிப்பு போன்ற ஒரு நிலையானது அதீத பயம் காரணமாக ஏற்பட்டதொன்றாகும்.
இன்றைய காலகட்டத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படும் பொழுது இவ்வாறான அதீத பயம் ஏற்படுவது மிக சாதாரணமாகும்.
இதை நாங்கள் மருத்துவத்தில் PNES ( Psychological Non Epileptic Seizures அல்லது Psychologically determined seizures) ஆழ்மன அல்லது மனநிலை சார்ந்த வலிப்பு , உடல்நோய் ( non organic) தொடர்பற்ற வலிப்பு என்று அழைப்போம். (இதை விளக்கும் ஒரு வீடியோவின் இணைப்பை இங்கு இணைத்துள்ளேன்)

https://www.youtube.com/playlist?list=PLZl_LQSNrX1WskJuKL4iP899rNW1tfWU7&fbclid=IwAR0z2o7af4CNfu-VOFTLq35O-LkmxeRI3n0sSk_fHmc9fZHJ0bHhpljeT6g

ஆனாலும் இங்கு கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், மருத்துவ விதிகளின் அடிப்படையில் ஒரு நோயாளியின் தனிப்பட்ட தகவல்களை இரகசியமாக பேணவேண்டிய ஒரு வைத்தியசாலை ஊழியரினாலேயே இந்த வீடியோ எடுக்கப்பட்டு மற்றவர்களுடன் பகிரப்பட்டுள்ளது.
எனவே அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. கடந்த காலத்தில் கொரோனா நோய் பற்றிய வதந்திகளை பரப்பியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டது ஞாபகம் இருக்கலாம்.
ஆனாலும் இந்த வீடியோவின் உண்மைத் தன்மை தெரியாமல் அதை மற்றவர்களுடன் எழுந்தமானதாகப் பகிர்ந்துகொண்ட நாம் அனைவரும் சமூக பொறுப்பில் இருந்து விலகி செல்கின்றோம் என்பதே உண்மை!
குறிப்பு: இந்நோயாளி தற்போது நலமாக இருக்கிறார்.
Dr விஷ்ணு சிவபாதம்
குழந்தை நல வைத்திய நிபுணர்
போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு