50 விதானைமாருக்கு கொரோனா!! நடக்கப் போவது என்ன?
இலங்கையில் கொரோனாத் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கிராம சேவகர்கள் 50 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிராம சேவகர்கள் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று (மே-06) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார இத்தகவலை தெரிவித்தார்.
அத்துடன், மேலும் 100 கிராம சேவகர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

