புதினங்களின் சங்கமம்

பம்பலபிட்டி இந்துக்கல்லுாரி மாணவன் வித்தகன் தற்கொலை செய்தது ஏன்?? பரபரப்புத் தகவல்கள் இதோ!!

வித்தகன் என்ற மாணவனின் தற்கொலையும் அதற்கு காரணமாக இருந்த ஆசிரியரின் செயலையும் பற்றி பேசுகிறது. எல்லா மனிதனும் தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை விடயம் இது. இதை தைரியமாக எடுத்து பேசும் ஆசிரியர் Faizal அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.
முதல் சம்பவம்
வித்தகன் தரம் 11 படித்துக்கொண்டு இருந்த காலப்பகுதியில் பாடசாலைக்கு நேரம் பிந்தி வந்த காரணத்தினால் பாடசாலை மைதானத்தில் நான்கு மணி நேரம் முழங்காலில் இருக்கும் படி ஆசிரியரால் தண்டிக்கப்பட்டு இருக்கிறான். இந்த சம்பவத்தால் மனதளவிலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான். அன்றைய நாளில் இருந்து மன அழுத்தத்திற்காக தொடர்ந்து மருந்து உட்கொள்ளும் நிலையை அடைந்திருக்கிறான் வித்தகன்.
வித்தகனின் இந்த நிலை பாடசாலை முழுவதும் தெரிந்த ஒன்றே, அது மட்டும் இல்லாமல் அவனுடைய வகுப்பாசிரியருக்கும் இது தெரியும். இதில் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால் அவனது மரணத்துக்கு காரணமாக இருந்த ஆசிரியர் க. சோதிலிங்கம் அவர்களுக்கும் இது தெரியும் என்பதே. வித்தகனின் தாயாரே நேரடியாக ஆசிரியர்களிடம் வித்தகனின் மன அழுத்தம் பற்றி கூறி இருக்கிறார்.
மரணத்துக்கான காரணம்.
65 மாணவர்கள் இருக்கக்கூடிய ஒரு ஹாலில் திருத்தப்பட்ட வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, Part 1 வினாத்தாளில் எழுபதுக்கு மேல் எடுத்தவர்களை சோதிலிங்கம் எழுந்து நிற்கும் படி கூறி இருக்கிறார். அதை சரியாக புரிந்துக்கொள்ளாத வித்தகன் Part 1, Part 2 இரண்டுக்கும் சேர்த்து எழுபது புள்ளிகள் எடுத்தவர்களை எழும்ப சொல்லுகிறார் என நினைத்து எழுந்து நின்றிருக்கிறான். அதற்கு அவர் அத்தனை மாணவர்கள் முன்னிலையில் அவனை வைத்து பின்வருமாறான வார்த்தைகளை கூறி இருக்கிறார்.
” உனக்கு அறிவு இருக்கா சோறு தானே திண்ணுற
பொண்ணு பார்க்க போகும் போது பொண்ண விட்டுட்டு அவங்க அம்மாவ கட்டுவியா? இப்படி இருந்தா உன் பொண்டாட்டி ஓடி போயிடுவா! ”
இத்தனைக்கும் வித்தகன் Business Studiesயில் இரண்டாவது அதிக புள்ளிகளை எடுத்திருக்கிறான் (2nd Highest ). இந்த சம்பவத்துக்கு பின்னணியில் இருக்கும் காரணம் கேட்கவே அருவருப்பானது. தன்னிடம் பிரைவேட் கிளாசுக்கு (institution) வரும் வித்தகன் வகுப்பில் இரண்டாவது இடத்தையும் தன்னிடம் பிரைவேட் கிளாசுக்கு வராத மாணவன் முதல் இடத்தையும் பிடித்ததே சோதிலிங்கத்தின் இந்த வன்செயலுக்கு காரணம் . அந்த வன்ஜகத்தை வார்த்தைகளால் தீர்த்துக்கொண்டார்.
இதற்கு அந்த 64 மாணவர்களும் சாட்சி. வித்தகன் தனது உயிரை மாய்த்துக்கொண்ட பின் மாணவர்கள் எல்லோரும் இது தொடர்பாக அதிபருக்கு கடிதம் எழுதி அதில் அத்தனை மாணவர்களும் சாட்சி கையெழுத்து போட்டிருக்கின்றனர். அந்த கடிதத்தையும் கீழே வீடியோவில் பார்க்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ஆசிரியர் மீது ஏற்கனவே மூன்று யூமன் ரைட்ஸ் கேஸ்கள் இருக்கிறது.. அவற்றில் ஒன்றாவது சரியான முறையில் விசாரிக்கப்பட்டு இருந்தால் இன்று இந்த நிலை வித்தகனுக்கு ஏற்பட்டு இருக்காது.
நான் படித்த காலத்திலும் இந்த ஆசிரிகர்களுக்கு இடையிலான பிரைவேட் கிளாஸ் மண்ணாங்கட்டி சண்டைகள் நிறைய பார்த்திருக்கிறேன். தனக்கு போட்டியாக இருக்கும் எதிர் ஆசிரியரியரின் பிரைவேட் கிளாசில் சேர்ந்ததுக்காக வகுப்பில் அந்த மாணவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வார்கள்.
அதே போல் என்னை நிறைவாக்கியதில் பெரும் பங்கு வகித்த இரண்டு ஆசிரியர்களை நான் என்றும் மறவேன். திருமதி. சாந்தி நடராஜா, திருமதி பத்மனாதன். இருவரும் என் மனதுக்கு நெருக்கமானவர்கள். ஆனால் இவர்களை போன்ற ஆசிரியர்களை வெறும் இரண்டு சதவீதமே இருக்கிறார்கள் என்பதே குறை.
ஆசிரியர் வேலை என்று சொல்லாமல் அதை ஆசிரியர் சேவை என்று உயர்வாக சொல்லும் வழக்கம் எம்மிடம் இருக்கிறது. அந்த சேவையை தன் வாழ்வாக தேர்ந்தெடுக்கும் ஒரு நபர் மற்றவர்களின் பார்வைக்கு முட்டாளாக படும் ஒரு மாணவனை மனிதனாக்கி நல்ல மாணவனாக மாற்றுவேன் அவனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல உறவாக இருப்பேன். மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு வெளிச்சமாக இருப்பேன், என்று நினைத்துக்கொண்டு எத்தனை போர் வருகிறார்கள். பதிலாக Top Results ஆசிரியராக இருப்பேன், மாணவர்கள் என்னைப்பார்த்தால் கிடு கிடு என நடுங்க வேண்டும், எனது தனியார் வகுப்புக்கு அட்மிஷன் நிறம்பி வழிய வேண்டும், பிறகு 25 வருட ஆசிரியர் சேவை 50 வருடல் ஆசிரியர் சேவை என்ற பெயருடன் பிரியாவிடை காணவேண்டும். இது தான் பெரும்பாலானவர்களின் கனவு.
கனவுகளோடு நன்றாக படித்துக்கொண்டு இருந்த ஒருவன் இப்போது இல்லை. ஆனால் அந்த ஆசிரியர் அது போன்ற ஆசிரியர்கள் நிம்மதியாக எங்கோ பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள், தெய்வமாக பார்க்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள், இதில் வருத்தத்திற்குரிய விடயம் என்னவென்றால் தான் செய்தது தவறு என்று புரியாமலே வாழ்வது தான்.
எல்லா ஆசிரியரும் ஒரு காலத்தில் மாணவர்கள் தான். அவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமையை மற்ற மாணவர்கள் செய்ய நினைப்பது என்னமாதிரியான மனநிலை என்று தான் தெரியவில்லை. இந்த செயலை எதிர்த்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கு முழு ஆதரவும் இந்துக்கல்லூரி மாணவர்களால் மற்ற கல்லூரி மாணவர்களால் சக மனிதர்களால் தரப்பட வேண்டும். இனி ஒருமுறை ஆசிரியர்கள் மாணவர்கள் மீது வன்செற்கள் பேசவே அடிக்கவோ யோசிக்கவேண்டும். தங்களுக்கான உரிமைகள் என்ன என்பதை மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டும்..!
#justiceforvithagan
நிச்சயமாக நியாயம் கிடைக்கும் வரை பகிருங்கள் ?