Home புதினங்களின் சங்கமம் பருத்தித்துறை முனைக்கடலில் நீராடிய கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சாவு

பருத்தித்துறை முனைக்கடலில் நீராடிய கிளிநொச்சியைச் சேர்ந்தவர் சாவு

பருத்தித்துறை முனை கடலில் நீராடியவர் சுழியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

கிளிநொச்சி பன்னங்கண்டியைச் சேர்ந்த இராமசாமி மாணிக்கராசா (வயது-36) என்பவரே இவ்வாறு உயிழந்தார்.

இறுதிச் சடங்கு ஒன்றுக்கு வந்த அவர் பருத்தித்துறை முனைக் கடலில் நீராடிய வேளை கடல் சுழியால் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.