குடாநாட்டில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் மேலும் 06 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளானவர்கள் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவர்,
யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவர் என்று தெரியவந்துள்ளது.
யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் இன்று 230 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

