புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் பயங்கரம்!! கோழிக்குஞ்சுகள் போல் பாதுகாக்கப்படும் பெண் பிள்ளைகள்!!

தற்போது கிளிநொச்சியில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கும், தனியார் கல்வி நிலையங்களுக்கும் ஏற்றி இறக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றார்கள்.
பாடசாலை அல்லது கல்வி நிலையங்கள் நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் முன் சென்று காத்திருந்து பிள்ளைகள் வெளியே வந்தவுடன் பருந்து கோழிக் குஞ்சை தூக்குவதை போன்று ஏற்றிக் கொண்டு பறந்துவிடுகிறார்கள். அல்லது மிக மிக நம்பிக்கைக்குரிய ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி ஏற்றி இறக்குகின்றார்கள்.
சில வருடங்களுக்கு முன் பிள்ளைகளை இயல்பாக துவிச் சக்கர வண்டிகளில் அல்லது பேரூந்துகளில் தாரளமாக சென்று வர அனுமதித்த பெற்றோர்கள் இப்பொழுது அவ்வாறு அனுமதிப்பதற்கு பயப்பிடுகின்றார்கள்.
பிள்ளைகளை அவர்களது நண்பர்களுடன் தாரளமாக சென்று வர அனுமதித்த பெற்றோர்கள் இப்போது அதனை அடியோடு மறுத்துள்ளனர். 24 மணி நேரமும் பிள்ளைகள் தங்கள் கண்ணுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக உள்ளனர். இது பெண் பிள்ளைகளுக்கு மட்டும் ஏற்பட்ட நிலைமை அல்ல ஆண் பிள்ளைகளுக்கும் இப்போது இதுவே நிலைமை.
ஏன்? என்று கேட்டால் பயம் என்கிறார்கள் என்ன பயம்?
அதிகரித்த ரவுடிகளின் எல்லை மீறிய செயற்பாடுகள். பெற்றோர்களிடமே நேரடியாக சென்று உங்கள் பிள்ளையை தனக்குதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அச்சுறுத்தல்கள், அங்க சேட்டைகள், என பெண் பிள்ளைகளுக்கான பாதுகாப்பு நாளுக்கு நாள் குறைந்து செல்கிறது.
இதேவேளை ஆண் பிள்ளைகள் தொடர்பிலும் பெற்றோர்கள் அதிகம் பயப்பிடுகின்றார்கள். போதைப்பொருளுக்கு அடிமையாகிவிடுவானோ? வாள் வெட்டுகாரர்களுடன் நட்பு ஏற்பட்டுவிடுமோ, என அஞ்சுகின்றனர்.
இதனால்தான் கோழி தனது குஞ்சுகளை பாதுகாப்பது போல் இப்போது தங்களை பிள்ளைகளை பாதுகாப்பதனை ஒரு பெரும் பணியாக பெரும்பாலான பெற்றோர்கள் செய்து வருகின்றனர்.
பெண்கள் நள்ளிரவிலும் தனியாக நடந்து சென்று மண்ணில் பட்டபகலில் அப்பாவுடன் கூட அச்சமின்றி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.