கிளிநொச்சி் அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டு கலக்கியடித்த அரசஅதிபர் ரூபவதி!! (வீடியோ)

இலங்கையில் பெரும் டொலர் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு இலங்கையின் பெண் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான டயானாக கமகே துணிச்சலாக சில கருத்துக்களை முன் வைத்துள்ளார். அவற்றில்

இரவு விடுதிகளை 24 மணி நேரமும் திறந்து வைத்திருப்பது,கஞ்சா வளர்த்து விற்பனை செய்வது, விபச்சாரத்தை சட்டபூர்வ தொழில் ஆக்குவது போன்ற இவரது கருத்துக்கள் இலங்கையில் பலருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தாலும் டொலர் வரவழைக்க சிறந்த ஒரு வழிகளில் இவை முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பெண்களில் இவ்வாறான சிந்தனையோட்டம் உள்ளவர்கள் பலர் அந்தக் காலம் தொடங்கி இருக்கின்றார்கள் என்பது உண்மை. காசுக்காக எதையும் செய்யலாம் என்ற நிலையில் தற்போது நாடு போய்க் கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் நீங்களும் இலங்கைக்கு டொலர்களைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றீர்களா? என சிந்தனை எழுகின்றது.

கிளிநொச்சியில் ஸ்ரூடியோ கடை வைத்திருக்கிற ஒருவன் உங்களை கொண்டு வந்து அழகுராணிப் போட்டியில் விட்டிருக்கின்றான் என்றால் அவன் எப்படிப்பட்ட ஒரு திறமைசாலியாக இருக்க வேண்டும்.

நோர்வேயில் ஏதோ ஒரு விதத்தில் பணத்தை பெற்று அதனை இங்குள்ள உறவுகள் மூலம் முதலிட்டு அழகுராணிப் போட்டி அது, இது என நடாத்தி அங்கிருந்து நோர்வே பணத்தை இலங்கைக்கு கொண்டுவருவதையிட்டு அரச அதிபரான நீங்கள் மிக்க சந்தோசமடைந்து இந்த போட்டியில் கலந்து கொண்டிருப்பீர்கள்.

அழகு ராணிப் போட்டி என்றால் என்ன? என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். கன்னிப் பெண்கள் மட்டுமல்லாமல் கலியாணம் கட்டிய பெண்களும் இந்த அழகுராணிப் போட்டியில் கலந்து சிறப்பித்திருக்கிறார்கள். இதில் கடல் கன்னி வேடம் போட்ட ஒரு பெண்ணும் கலந்து சிறப்பித்து பரிசு பெற்றதாக தெரியவருகின்றது.

நடக்குறது அழகுராணிப் போட்டி. அதற்கிடையில் அதில் ஒரு ருவிஸ்ட் ”கலாச்சார உடையில்” என்ற பெயர். சேலையை மாத்திரம் கலாச்சாரமாக்கிக் கொண்டு முகம் முழுக்க பெயர், ஊர் தெரியாத பெயின்ட்டுகளை எல்லாம் பூசி எந்த ஒரு கலாச்சாரத்திலும் இல்லாத கவரிங் நகைகளையும் அள்ளி போட்டுக் கொண்டு வந்த அந்தப் பொம்பிளைப் பிள்ளைகளை பார்த்து உண்மையில் அப்பாவிகள் என்றே பலருக்கும் எண்ணத் தோன்றியது.

கிளிநொச்சி அழகுராணிப் போட்டியில் கலந்து சிறப்பித்த அழகுராணிகள் மட்டும்தான் அழகானவர்களா? வேறு அழகான பெண்கள் எவரும் கிளிநொச்சியில் இல்லையா? அவ்வாறு இருந்திருந்தால் அவர்கள் ஏன் இந்த அழகு ராணிப் போட்டியில் பங்கு பற்றவில்லை? கிளிநொச்சி அழகு ராணிப் போட்டியில் கலந்து சிறப்பித்தவர்களை வெளிநாடுகளில் வாழ்பவர்கள் அல்லது தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் பார்த்துவிட்டு என்ன நினைத்திருப்பார்கள்? நீங்களே கூறுங்கள்

இவர்களை விட வேறு எவரும் அங்கு அழகானவர்கள் இல்லையா? இதுதான கிளிநொச்சி பெண்களின் அழகு? இவ்வாறு நினைத்திருக்க மாட்டார்களா?

உண்மையில் அங்கு நின்ற அழகு ராணிகளை விட மேக்கப் போடாது கண்ணாடியுடன்  அரச அதிபர் என்ற ஆளுமையுடன்  நீங்கள் நல்ல அழகாக இருந்தீர்கள் என்பதை மறக்கவோ மறுக்கவோ முடியாது. எவ்வாறான ஆளுமை இருந்தாலும் ஒரு ஸ்ரூடியோக்காரன் உங்களை நன்றாக விளம்பரமாகப் பயன்படுத்திவிட்டான்.

கலியாண வீட்டுக்கு மேக்கப் போடுபவர்களை தமது வியாபார நோக்கத்திற்காக வளைத்தெடுத்த அந்த ஸ்ரூடியோக்காரன் அவர்களை வைத்து கலியாண வீடு, சாமத்தியவீடுகளுக்கு போட்டோ, வீடியோ எடுத்து சம்பாதிப்பதற்காகவும் வேறு நோக்கத்திற்காகவும் இந்த அழகுராணிப் போட்டியை நடாத்தியதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல்கள் தவறானதாகக் கூட இருக்கலாம்.

ஆனால் அரச அதிபராகிய உங்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும். கிளிநொச்சியில் எத்தனையோ பெண்கள் வேலைவாய்ப்பற்று உள்ளார்கள். எத்தனையோ பெண்கள் யுத்தத்தில் கணவனை இழந்து விதவைகளாக பெண் தலைமைத்துவ குடும்பத்தலைவிகளாக வாழ்கின்றார்கள். வறுமையின் பிடியில் வாழ்வாதாரத்துக்கு வசதிகள் இல்லாது அல்லோலகப்படுகின்றார்கள். அவர்களை வாழ வைத்து அவர்களை நீங்கள் அழகான மனநிலைக்கு கொண்டு வந்திருக்கலாமல்லவா??

இந்த அழகு ராணிப் போட்டிக்கு நீங்கள் செலவு செய்யும் பணத்தை வாழ்வாதரம் இன்றி இருக்கும் பெண்களுக்கு தொழில்வாய்ப்பை கொடுக்கும் வேலைத்திட்டங்களுக்காக அவர்களுக்கு உதவி செய்தால் அந்தப் பெண்களையும் அழகானவர்கள் ஆக்கலாம் என்று நீங்கள் அழகு ராணிப் போட்டிக்கு உங்களை அழைக்க வந்தவர்களிடம் கூறியிருக்கலாம் அல்லவா??

எமக்கு கிடைத்த தகவல்களின் படி கிளிநொச்சியில் நடந்த அழகுராணிப் போட்டி வேறு ஒரு நோக்கத்திற்காக நடாத்தப்பட்டது என்றும் அங்கு வந்த பெண்கள் அதற்கு பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவருகின்றது. நடாத்தப்பட்ட போட்டிகளில் பெரும் குளறுபடிகள் காணப்பட்டதாகவும் நடுவர்கள் தம்மால் ஏற்கனவே ஆளப்பட்ட பெண்களை மட்டும் வெற்றியாளர்களாக தெரிவு செய்ததாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறான ஒரு போட்டிக்கு நீங்கள் சென்று டயானாக கமகே போன்ற ஒரு பெண்ணாக மாறி இலங்கைக்கு பணத்தை கொண்டுவர பெரும் முயற்சி செய்கின்றீகள் என்பதையிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பீர்கள். ஆனால் உங்களின் இந்தச் செயற்பாட்டால் பலரும் விசனத்தில் இருப்பார்கள் என்பதையும் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நன்றி
வம்பன்

error

Enjoy this blog? Please spread the word :)