விடுதலைப்புலிகளை மீளுருவாக்க முயற்சி; யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் 5 பேர் கைது!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் இருபாலை மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. இதே வேளை
பயங்கரவாத செயற்பாட்டினை உருவாக்கும் நோக்குடன் குழுக்கள் அமைத்து செயற்பட்டமை மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீளுருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திலும் இன்று (17)ஒருவர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுடன் தொடர்பினை பேணிய குறித்த குடும்பஸ்தர்கைதுசெய்யப்பட்டுள்ளார்.
45 அகவையுடைய பாடசாலை வீதிவள்ளிபுனம் புதுக்குடியிருப்பினை சேர்ந்த குடும்பஸ்தரரே இன்று அதிகாலை பயற்கரவாதகுற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

