புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

இலங்கையைச் சேர்ந்த பிரபல யூரியூப்பரான 3 பிள்ளைகளின் தாய் பின்லாந்தில் படுகொலை!!

இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 3 பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்ட பெண் பின்லாந்தில் பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தனது குடும்பத்தினருடன் நீண்ட காலமாகப் பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் வீட்டிற்குச் சென்ற அயலவர் ஒருவர் குறித்த பெண் சடலமாக இருந்ததை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அந்நாட்டு பொலிஸாரால், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

4 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x