Home புதினங்களின் சங்கமம் யாழில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களுக்கு விளக்கமறியல்!

யாழில் அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளிப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் காயமடைந்த இருவரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அவர்களுடன் காணொளித் தொடர்புத் தொழில்நுட்பம் மூலம் விசாரணை மேற்கொண்ட பதில் நீதவான் அவர்கள் இருவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

காயமடைந்தவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.