புதினங்களின் சங்கமம்

நல்லுார் ஆலயத்திற்குள் கழிவு ஒயில் ஊற்றி அலங்கோலம் செய்தது யார்?? (Video)

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் நாசகார செயல்; பக்தர்கள் கவலை!
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விசமிகள் சிலர் கழிவு ஆயிலை ஊற்றியுள்ளமை இந்துக்கள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி நல்லூரில் முத்தியடைந்த யோகர் சுவாமியின் குருபூசை தினத்தன்று இந்த நாசகார செயலை அவர்கள் செய்துள்ளனர்.
அதன்படி நல்லூரானின் தேரடியிலும் , நல்லூரான் வாசலில் பக்தர்கள் அமரும் இடங்களிலும் இவ்வாறு கழிவு ஆயிலை விசமிகள் ஊற்றிவைத்துள்ளனர்.
இந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றும் நல்லூரான் ஆலயத்தில் விசமிகளின் இந்த செயலுக்கு சமூகஆர்வலர்கள் பலரும் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் நல்லூர் ஆலயத்தின் புனித்தன்மையை கெடுப்பதற்காக இவ்வாறு கழிவு ஆயிலை ஊற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அண்மையில் நல்லுார் ஆலயத்தை மலசலகூடமாக மாற்ற வேண்டும் என ஆவா குழு காவாலி அருன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

May be an image of tree and outdoorsMay be an image of outdoorsMay be an image of outdoorsMay be an image of temple, outdoors and monumentMay be an image of temple, outdoors and monumentMay be an image of outdoorsMay be an image of outdoors