புதினங்களின் சங்கமம்

நேற்றைய பளை விபத்தில் படுகாயமடைந்த தந்தையும் பலி!! டிப்பர் சாரதி தப்பியோட்டம்!!(Photos)

நேற்றிரவு கிளிநொச்சி பளை- இத்தாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனத்துடன் மோதி தந்தையும், அவரது இரண்டு மகன்களான 9, 12 வயதுடைய இரு சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர்.
இவர்களின் இறப்பு மிகவும் ஆச்சரியமான சம்பவம் இருக்கின்றது. மணல் வியாபாரியான மேற்படி நபர் தனது பாவனையில் இருந்த டிப்பர் ரக வாகனத்தை சில காலத்துக்கு முன் வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். அந்த பணத்தில் கார் ஒன்றை கொள்வனவுசெய்தவர் அதனை தமது போக்குவரத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளார் நேற்று அவரால் விற்பனையான டிப்பர் வாகனமே காரில் போகும்போது அவரையும் குழந்தைகளையும் மோதி பலியெடுத்து இருக்கிறது. டிப்பர் சாரதி அதி வேகமாக டிப்பரை செலுத்தியே விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓடித்தப்பியுள்ளான். இது திட்டமிட்ட கொலையாகவும் இருக்கலாம் என கருதப்படுகின்றது.