யாழ் மண்கும்பான் மாணவிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க சென்ற அதிகாரிகள் மீது பொதுமக்கள் தா்ககுதல்!!
யாழ் மண்கும்பான் அரசினல் தமிழ் கலவன் பாடசாலையில் 10 வயதான மாணவர்கள் அதிபரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொர்பாக இன்று விசாரணை செய்யச் சென்ற கல்வி அதிகாரிகள் மீது அப்பகுதி பொதுமக்கள் சற்று முன் தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரியவருகின்றது. வேலணை கல்விவலய உதவிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் உடற்கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை குறித்த மாணவிகளைத் தாக்கிய அதிபர் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
