புதினங்களின் சங்கமம்

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா வீட்டில் அதிரடி தேடுதலில் ஆயுதங்கள் மீட்பு!!

இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவின் வீட்டில் விசேட அதிரடிப் படையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் கிழக்கு மாகாண ஆளுநருக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் சில ஆயுதங்களையும் அவர்கள் மீட்டுள்ளனர்.

இன்று பகல் நடத்தப்பட்ட இந்த தேடுதல் தொடர்பாக பல்வேறு விடயங்களை எமது செய்திப் பிரிவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

அந்த ஆயுதங்கள் அனைத்தும் தனக்கான பாதுகாப்பு சேவையை வழங்குவதற்கான அதிகாரிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாகும் என்று அவர் பதிலளித்தார்.