கல்முனையில் தற்கொலையாளியின் மனைவி பிள்ளைப்பேறிற்கு வந்ததாரா ???மக்கள் பதற்றம்!!
கல்முனை ஆதார வைத்தியசாலையில் தற்கொலையாளியின் மனைவி பிள்ளைப்பேறிற்கு வந்ததாரா ???வைத்தியசாலை வளாகம் மக்கள் அல்லோகலப் பட்டனர்.!!!
கல்முனை தமிழ்பிரிவிலுள்ள வடக்கு ஆதாரவைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியான 6ம் விடுதியில் சிகிச்சை பெறுகின்ற நோயாளி பற்றி அம்பாரை சம்மாந்துறை பிரபல முஸ்லிம் அரசியல்வாதி மகள் தாதிய உத்தியோகத்தராக கடமைபுரிகின்றார்.இவர் சில மாதங்கள் முன்பே அம்பாரை வைத்தியசாலையிருந்து இடமாற்றத்தில் வந்தவர்.
இவரது கைத்தொலை பேசிற்கு அழைப்பு வந்துள்ளது .நீங்கள் கடமை புரியும் 6ம் விடுதியில் எமது புனித இயக்கத்தின் உறுப்பினர் மனைவி சிகிச்சை பெறுகின்றார் .அவர் நிலை எப்படி எங்களால் தற்போது அவரை தொடர்பு எடுக்க முடியவில்லை நீங்கள் அவருக்கு அல்லாவுக்காக உதவி புரிய வேண்டும் காபீர்களை (மாற்றுமதத்தவர்)அழிக்க போராடும் எம்மக்களுக்கு உதவுங்கள் இன்சா அல்லாஹ் மறுமையில் உதவுவார் .என கூறியதும் அவர் பதற்றப்பட்டுள்ளார் .இதை அருகிலிருந்த சக உத்தியோகத்தர் கேட்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உடனே வைத்தியசாலை பணிப்பாளருக்கு தகவல் கொடுக்க அவர் போலிசாருக்கு அறிவிக்க இன்றுகாலை பூராக கல்முனை வைத்தியசாலை அதிலுள்ள உபகரணங்கள் ,குளியலறை ,நோயாளர்கள்,உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு தரப்பினரால் பரிசோதித்துள்ளார்கள்.
இதில் பயங்கரவாதி மனைவி என கூறப்பட்ட பெண்ணை போலிசார் நேரடியாக விசாரித்துள்ளார்கள் அவர் பெயர் ரிப்னா எனவும் தமது கணவன் பற்றி முன்னுக்கு பின்னான முரணாண தகவல்களை தெரிவித்துள்ளார் .இதனால் இவர்மீது விசாரணை தொடர்கின்றது.
ஆனால் வைத்தியசாலை சூழல்தான் பதற்றமும் பரபரப்பாக காணப்படுகின்றது .இச்செய்தியை தொடர்ந்து புர்கா அணிய தடை என ஜனாதிபதி அறிவித்தும் வடகிழக்கில் தமிழர் வசிக்கும் திணைக்களங்களில் இதுபற்றி யாரும் கவனத்தில் எடுக்காத நிலையில் இன்றைய நாள் கல்முனை ஆதார வைத்தியசாலையில் புர்கா அணிந்து சென்ற பெண்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.