புதினங்களின் சங்கமம்

இலங்கையில் பேஸ்புக் உட்பட்ட சமூகவலைத்தளங்களின் தடை நீங்குகின்றது!!

அனைத்து சமூக ஊடகங்களின் மீதான தடையை நீக்க உத்தரவிட்டுள்ளார் ஜனாதிபதி.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மீதான தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து சமூக ஊடக தடையை நீக்கும்படி தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடக்கும்படி, பயனாளர்களை கேட்டுள்ளது ஜனாதிபதி செயலகம்.