யாழில் படுத்துறங்கிய இளைஞன் மீது காடையர்கள் கொலை வெறித் தாக்குதல்!! CCTV காட்சிகள் இதோ!!

கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூரம் யாழ்ப்பாணத்தின் பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூவர் இணைந்து இரும்புக் கம்பியினால் மிக மூற்க்கமா தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் வீதியால் இழுத்துச் சென்று வீசியுள்ளனர்.

தாக்கப்பட்டஙரது கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதல் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர், தாக்குதலாளிகள் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களை கைது செய்யும் நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

error

Enjoy this blog? Please spread the word :)