ஆச்சிகளே கவனமெணை இந்திய இராணுவ அறுவார் வரப்பெறாங்களாம்!
ஆச்சிகளே கவனமெணை
அறுவார் வரப்பெறாங்களாம்…
இந்தி இராணுவம் இலங்கைக்கு வரப்போறதாய் செய்திகள் உலாவுது.
எங்கள் ஊரின் ஆச்சிகள் கூட வீட்டை விட்டு வெளிவரமுடியாத அவல நிலை இனி வரப்போகுது.
சோதனை எண்ட பெயரில் வீட்டுக்குள் புகுவதும்
சொத்துப் பத்துகளை நாசம் செய்வதும்
பெறுமதியான பொருளையெல்லாம் கொள்ளையடிப்பதும் நித்தம் இனி அரங்கேறப்போகுது.
வேலி பிரிப்புகளும் ஆடு, கோழி திருடல்களும் தங்கு தடையின்றி நிகழப்போகுது.
மாம்பிஞ்சு முதல் எலுமிச்சம் பிஞ்சு வரை உருவி எடுக்க எங்கள் வளங்கள் சின்னா பின்னப்படப்போகுது.
விழுந்து விழுந்து எழுந்த இனத்தின் வீடுகளில் மிஞ்சிக் கிடப்பதும் இனி இல்லை என்றாகுது.
நாய்கள் அழுதழுது ஓலமிடும் ஓசை இனி நாற்றிசையும் கேட்கப் போகுது.
சப்பாத்தி மணமும் பாண்டல் நெய் நாத்தமும் இனி எங்கள் குச்சொழுங்கை வரை பரவப்போகுது.
பாழ்படுவார் வரவால் பார்த்தீனியம் எங்கும் செழிக்கப் போகுது… எம் வாழ்வுதான் தொலையப் போகுது…
ஆச்சிகளே கவனமெனை வீட்ட விட்டு வெளிய வரமால் உங்களை நீங்களே காவாந்து பண்ணிக்கொள்ளுங்கோ…
கடவுளே!
இது வதந்தியா இருந்துவிடட்டும். நாசமறுவார் வந்தா ஈழம் தாங்காது.
காலன் வந்தாலே கலங்காத தமிழினம்
இவங்கள் வரவால் கலங்கிய கலக்கம்
காலமுள்ளவரை கடக்காது மனதை விட்டு…
ஈழத்துப்பித்தன்