FEATUREDLatestபுதினங்களின் சங்கமம்

காவாலியாக மாறிய சண்டிலிப்பாய் இரட்டைய புலவு வைரவர் ! காப்பாற்றப் போவது யாரோ? வீடியோ

யாழ்ப்பாணத்தில் ஆலயங்களின் பெயரால் வீதிகளில் அதிகளவில் ஒலிபெருக்கிகள் கட்டப்படுவதால் நாளுக்கு நாள் பொது மக்களும் ,மாணவர்களும் தாங்கமுடியாத துன்பங்களை அனுபவித்து வருவது யாவரும் அறிந்ததே. இதற்கு பொலிசாரோ ,ஆளுனர் தரப்போ எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.
இன்றையதினமும் (27) சண்டிலிப்பாயில் அமைந்துள்ள இரட்டைய புலவு வைரவர் கோயிலில் 30 இற்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகளை 2 கிலோ மீற்றர்களுக்கும் அதிகமாக வீதிகளில் கட்டி குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு (வீடியோ பதிவின்போது அது ஒலிக்கவில்லை) சூழலிலுள்ளவர்களை துன்பப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் ஆலயத்தில் ஏழாம் திருவிழாவைச் சேர்ந்தோர்.
இவ்வாலயத்தில் ஏனைய திருவிழாக்கள் ஓரளவு பக்தி பூர்வமாக நடைபெறுகின்ற போதும் ஏழாம் திருவிழாவை செய்வோர் அங்குள்ள கல்வியறிவு குறைந்ததும் போதைப் பொருளுக்கு அடியான இளைஞர்களை கொண்டதுமான ஒரு சமூகத்தினர் ஆவார். இவர்கள் முறையற்ற விதத்தில் உழைக்கும் பணத்தினை கொண்டும் சில வெளிநாட்டு காவாலிகளின் பணத்தினை கொண்டும் இவ்வாறாக மக்களை துன்பப்படுத்துவதுடன் பணத்தினையும் கரியாக்கிவருகின்ற்றர்.இதன் எல்லைக்குள்தான் சண்டிலிப்பாய் வடக்கு தமிழ் கலவன் பாடசாலை, வி.என் அக்கடமி என்பனவும் காணப்படுகின்றது. பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதை தடுக்கும் சட்டங்களின் கீழ் இவர்களை கைது செய்யவேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
“இதனாலேயே,செல்வமானது எப்போதும் கல்வியறிவு படைத்தவர்களிடமே இருக்கவேண்டும். கல்வியறிவு இல்லாதவனிடமுள்ள செல்வமானது ஆபத்து நிறைந்தது என பண்டைய நூல்களில் சொல்லப்பட்டுள்ளது”

May be an image of 1 person and text