ராஜபக்சவின் புதல்வர் ரோகிதவின் மனைவியின் தாயின் 2வது கணவன் திவாகரன் மீது பாலியல் புகார்!!

தமது மனைவியின் மாற்றாந் தந்தை மீது பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரின் புதல்வரான ரோகித ராஜபக்ஸகோரிக்கை விடுத்துள்ளார்.

தமது டுவிட்டர் தளத்தில் வௌியிட்டுள்ள பதிவிலேயே ரோஹித ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
– Advertisement –

இதன்படி, தமது மனைவியின் தாய் N.V Thivagaran என்ற நபரை திருமணம் செய்துகொண்டதையடுத்து, தாம் இருவரும் அவர்களுடன் கடந்த சில வருடங்களாக எந்தவொரு தொடர்பிணையும் பேணவில்லை என தமது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எந்தவொரு பாலியல் ரீதியான துன்புறத்தல் சம்பவங்களை தாமும் தமது மனைவியும் கண்டனத்தை வௌியிடுவதாக ரோஹித ராஜபக்ஸ தமது பதிவில் கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்த பிரபல நட்சத்திர விடுதியொன்றில் ரோஹித ராஜபக்ஸவின் மனைவியின் மாற்றாந் தந்தை யுவதியொருவரை தமது கையடக்கத் தொலைபேசியினூடாக தவறாக படம் பிடித்தமை தொடர்பில் பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

error

Enjoy this blog? Please spread the word :)