பேரணியில் பங்குகொண்ட அரசியல் முக்கியஸ்தர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்புப் பேரணியில் பங்குகொண்ட முக்கியஸ்தர்களுக்கு எதிராக பருத்தித்துறை நீதிமன்றில் பொலிஸார் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்றக் கட்டளையை மீறி போராட்டத்தினை முன்னெடுத்தமை மற்றும் கலந்துகொண்டமைக்கு எதிராகவே குறித்த வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிரிகாரிகள் இணைந்தே குறித்த வழக்கினை தாக்கல் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சிகளின் முக்கியஸ்தர்கள் உட்பட்ட பிரமுகர்களுக்கு எதிராகவே வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறும் என்று நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

error

Enjoy this blog? Please spread the word :)