மட்டு’வில் 14 கொடியவர்களால் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட பிரேமினி!! அதிர்ச்சி வாக்குமூலம்!!(Video)
“பிறேமினி என்ற அந்த 25 வயது மாநிற இளம் பெண் முதலில் சிந்துஜன்(பிரதீபன்) என்ற பிள்ளையான் குழு( TMVP) உறுப்பினரால் கதறக் கதற பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 14 பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வல்லுறவு புரிந்தனர். ஆரம்பத்தில் பெரிதாக சத்தமிட்டு கதறிய பிறேமினி கடைசியில் எந்தவித சத்தமும் எழுப்பவில்லை” – இவ்வாறு ரீ.எம்.வீ.பி. இல் அந்தக் காலத்தில் செயற்பட்ட ஒருவர் பிபரபல ஊடகவியலாளர் DBSஜெயராஜுக்கு தெரிவித்திருந்தார்.
வீடியோவுக்கு இங்கே அழுத்தவும்
இந்த வாக்குமூலம் இலங்கையில் 04.02.2007 வெளியான The Sunday Leader பத்திரிகையில் வெளியாகி இருந்தது. 14 பிள்ளையான் குழு உறுப்பினர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் அந்த அப்பாவிப் பெண்ணின் நிலை பற்றி குறிப்பிட்ட அந்த TMVP உறுப்பினர் ‘she merely sobbed and whimpered..’ என்று கூறியதாக ஜெயராஜ் தனது கட்டுரையில் பதிவிட்டிருந்தார்.
அதாவது அனைத்தும் முடிந்த போது ‘அந்தப் பெண் வெறுமனே துடித்தாள், சிணுங்கினாள் ..’ என்று கூறியிருந்தார். அங்கிருந்த பல TMVP பிள்ளையான் குழு உறுப்பினர்களுக்கு இந்தச் செயலில் உடன்பாடு இல்லாதிருந்த போதிலும், தடுத்து நிறுத்த முடியாமல் மௌனமாக இருந்தார்கள்.
தீவுச்சேனை ‘பிள்ளையான் குழு’ முகாமிற்கு அருகில் இருந்த காட்டுப் பகுதிக்கு பிரேமினியை அவர்கள் அழைத்துச்சென்றார்கள்.
‘ஒரு நடைபிணம் போல எந்தவித சலனமும் அற்று நடைந்துசென்ற அந்தப் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி காடுகளுக்கு வீசி எறிந்தார்கள்’.
இந்தச் சம்பவம் நேரடிச் சாட்சியுடன் கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியானதானது சர்வதேச மட்டத்தில் மிகப் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான கண்டணங்களுக்கும் உள்ளானது.
2006ம் ஆண்டு ஜனவறி மாதம் 29 மற்றும் 30ம் திகதிகளில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழக (TRO) வாகனங்கள் இரண்டை வெலிகந்தையில் வைத்து கடத்திய பிள்ளையான் குழு உறுப்பினர்கள், அதில் பயணம்செய்த 20 மனிதநேயப் பணியாளர்களை பொலனறுவை- மட்டக்களப்பு எல்லைக் கிராமமான தீவுச்சேனையில் இருந்த தமது முகாமுக்கு கொண்டுசென்றார்கள்.
அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட 20 பேரில் 13 பணியாளர்கள் விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்கள். பிரேமினி உட்பட 7 ஊழியர்கள் சித்திரவதைசெய்து படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த படுகொலையில் பிள்ளையான் குழுவைச் சேர்ந்த சிந்துஜன், சசி, ஜீவா, சித்தா போன்றவர்களின் பெயர்கள் சாட்சியினால் குறிப்பிடப்பட்டிருந்தன.
விடுவிக்கப்பட்ட 13 பேரில் ஒரு பெண்ணாண ‘டோசினி’ என்பவர் கருணா குழு உறுப்பினர் ஒருவருடன் திருமணம் மூடிக்காமல் வாழ்வதற்கு (living together) நிர்பந்திக்கப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Assistant secretary of state கிறிஸ்டினா ரொக்கா (Christina Rocca) இந்த விடயம் பற்றிய பதிவினை மேற்கொண்டுள்ளார். அதேபோன்று Amnesty International சர்வதேச தொண்டு நிறுவனமும் இந்த கடத்தல் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இதுபோன்ற மனதை உருக்கும் மனிதத்துக்கு விரோதமான கோரத்தை நிகழ்த்தியவர்கள் இன்று மட்டக்களப்பு மக்களின் பிரதிநிதிகளாக, தலைவர்களாக வர முனைவதுதான் மனதுக்கு சங்கடமாக இருக்கின்றது.
பி.கு:
1. பிள்ளையான் குழு முன்னாள் – இந்நாள் உறுப்பினர்கள்… தேர்தலில் அந்த அமைப்பு வெற்றிபெற்றால் Building contract கிடைக்கும், liquir licence கிடைக்கும் என்று நினைப்பவர்கள்… அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக பிள்ளையானிடம் மாதாந்த ஊதியம் பெற்று சிறைச்சாலையில் அவருக்கு கால் அமுக்கிவிடும் தொழிலை பிரதானமாகச் செய்துகொண்டிருக்கின்ற சிறைக்காவலர் நவநீதன் போன்றவர்கள் தாராளமாக இங்கு comments போடலாம். ஆனால் இந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றி உங்கள் அபிப்பிராயம், திருத்தங்களை எழுதினால் நல்லது.
2. தொலைபேசியில் என்னை மிரட்டி, உயிரச்சுறுத்தல் விடுபவர்கள் தயவுசெய்து சிரிப்பு வாறமாதிரி மிரட்டல்களை விடுக்காமல் கொஞ்சம் ‘சீரியசாக’ மிரட்டுங்கள்.
நன்றி
மீனகம்

