புதினங்களின் சங்கமம்

யாழில் முஸ்லீம் வீட்டினுள் இருந்த பாரிய நில அறையால் பரபரப்பு!! (video)

யாழ் நாவாந்துறைப் பகுதியில் முஸ்லீம் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நில அறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாழ்.நாவாந்துறை பகுதியை அண்டியுள்ள ஒஸ்மானியா கல்லுாாி வீதியில் உள்ள பச்சை பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள முஸ்லிம் வா்த்தகா் ஒருவருக்கு சொந்தமான வீடொன்றுக்குள் இருந்த நிலக்கீழ் தளம் (Underground) ஒன்று சிறப்பு அதிரடிப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நாவாந்துறைப் பகுதியில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று காலை பாரியளவிலான சுற்றிவளைப்புத் தேடுதலை முன்னெடுத்திருந்தனர்.

இந்தத் தேடுதலின் போதே வீடொன்றுக்குள் அமைக்கப்படிருந்த நிலக்கீழ் தளம் கண்டறியப்பட்டது.

பங்கர் வடிவிலான இந்த நிலக்கீழ் தளம் சீமெந்தால் கட்டப்பட்டுள்ளது. அதனைக் கண்டறியாதவாறும் சிமெந்திலான கொங்கிரீட் போடப்பட்டுள்ளது. அதற்குள்ளிலிருந்து எவையும் மீட்கப்படவில்லை.

“அந்த வீட்டில் சுமார் 40 வருடங்களுக்கு முன்பே இந்த நிலக்கீழ் பாதை அமைந்துள்ளது. வீட்டின் உரிமையாளர் தற்போது இல்லை. அவர் இறந்துவிட்டார். அவருடைய உறவினர்களும் இங்கு இல்லை.

தமிழ் – முஸ்லிம் குடும்பங்களால் இணைந்து அந்த வீடு பராமரிக்கப்படுகிறது” என்று அது தொடர்பில் விபரம் அறிந்தவர்கள் விசாரணையில் தெரிவித்தனர்.