புதினங்களின் சங்கமம்

மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட மாணவி துஸ்பிரயோகம்! தடயவியல் வைத்தியர் கைது!

வட கொழும்பில் உள்ள ராகம போதனா வைத்தியசாலையில் தடயவியல் மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர், 16 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் பாமுனுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை, பெம்முல்லா பகுதியைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி, 16 வயது மாணவியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகத்தின் பேரில் கைது
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. விசாரணையின்போது வெளிப்பட்ட மருத்துவத் தகவல்களின் அடிப்படையில், அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரான மருத்துவ அதிகாரி, கடந்த ஜூன் 22-ம் திகதி வெலிசரா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை ஜூன் 26-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டப்பூர்வக் காவலில் இருந்த குழந்தையைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, மேல் மாகாண வடக்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி கலிங்க ஜயசிங்க மற்றும் நீர்கொழும்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிமல் பெரேரா ஆகியோரின் மேற்பார்வையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.பாமுனுகம பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி இமல் லக்க சஞ்சீவ தலைமையிலான அதிகாரிகள் குழு, இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x