புதினங்களின் சங்கமம்

இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டன!

தொடர் மழையினால் இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது.

நீரின் வருகை அளவைப் பொறுத்து நீர் வெளியேற்றப்படும் அளவு அதிகரிக்கப்படலாம் என்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.