புதினங்களின் சங்கமம்

சாய்ந்தமருது மோதலில் 3 முஸ்லீம் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட காட்சிகள் (Photos)

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையில் பொலிஸாருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் சம்பவம் தற்போது வரையில் தொடர்ந்துள்ளதாக அறியமுடிகின்றது. தற்கொலை குண்டுகள் தயாரிக்கும் நிலையம் ஒன்று உள்ளதாக ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய பொலிஸார் குறித்த பகுதிக்கு நேற்று மாலை சென்றுள்ளனர்.

அங்கு சென்று சோதனையிட்ட போது, குழுவொன்று பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை,
நேற்று அட்டாளைச்சேனை, நிந்தவூர் பகுதிகளிலும் அவர்களை குறிவைத்து தேடுதல்
நடத்தப்பட்டது. இந்த தேடுதல்களில் 2 நிசான் வாகனங்கள் உள்ளிட்ட மூன்று
புதிய வாகனங்கள் மீட்கப்பட்டன.

அந்த தேடுதல்களை தொடர்ந்து, சம்மாந்துறை வீட்டிற்கே அந்த
குடியிருப்பாளர்கள் திரும்பியுள்ளனர். அந்த புதிய குடியிருப்பாளர்கள்
தொடர்பில், பிரதேசமக்களால், அந்த பகுதியில் நின்ற போக்குவரத்து காவல்துறை
அதிகாரியொருவருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதையடுத்து பொலிஸ் அதிகாரி அந்த வீட்டிற்கு சென்றபோது, அவர் மீது
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. எனினும், பொலிஸ் அதிகாரி அங்கிருந்து
தப்பி வந்துவிட்டார். உடனடியாக இராணுவத்தினரால் வீடு சுற்றிவளைக்கப்பட்டது.

கடுமையான மோதலின் பின்னர் வீடு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.