உலகில் பெரிய அதிஷ்டசாலியாக இந்த ராசிப் பெண்களை திருமணம் செய்தாலே போதுமாம்…!!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது ஒரு விதத்தில் உண்மையும் கூட.கூடுதலாக, திருமண பந்தத்தில் இணையும் இருவரின் ராசி, அவரின் உண்மையான சுபாவம் மற்றும் குண நலத்தை அறிய பெரிதும் உதவுகிறது.நாம் பிறக்கும் நேரத்தில் இருக்கும் கிரக நிலைகள் கொண்டு நமது ராசி அறியப்படுகிறது ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு தனித்தன்மை பொருந்திய குண நலன்கள் உண்டு. ஒரு ஆண் தனது துணையைத் தேட அதிக நேரம் மற்றும் முயற்சியை செலவிடுகிறான்.ஆனால், ராசி ஒரு ஆணின் தேடலை மிகவும் எளிதாக்குகிறது. எல்லா ராசிகளுக்கும் நல்ல மற்றும் கெட்ட குணாதிசயங்கள் இருக்கும் வேளையில் சில ராசியினர் மட்டும் ஒரு சிறப்பான மனைவிக்கான குணங்களைப் பெற்றிருப்பார்கள்.அந்த விதத்தில் நல்ல மனைவிக்கான தகுதியை உடைய ராசிகளை இப்போது இந்த பதிவில் நாம் காணலாம். ஆண்கள் இந்த ராசி பெண்களை திருமணம் செய்வதால் வாழ்வில் சிறப்போடு வாழலாம்.கடக ராசி:கடக ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு நல்ல மனைவிக்கு வேண்டிய சில சிறப்பான குணங்கள் உண்டு.திருமண பந்தத்தை இவர்கள் அதிகம் மதிக்கின்றனர். இயற்கையாகவே மிகவும் அன்பானவர்களாக இருப்பார்கள். தனது துணையிடம் சுயநலமற்று இருப்பார்கள். நேர்மை மற்றும் தூய்மையான பண்புகள் இவர்களுடையதாக இருக்கும்.மிகவும் உண்மை உள்ளவராக இருப்பார்கள். கடக ராசி பெண்கள், தங்கள் கணவரை மிகவும் சந்தோஷமாகவும் மன நிறைவோடும் வைத்துக் கொள்வார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

கும்ப ராசி:கும்ப ராசிப் பெண்கள் மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். அலுப்பை முற்றிலும் வெறுப்பவர்கள். சில நேரங்களில் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள்.அது தவிர, விட்டுக் கொடுக்கும் தன்மை மற்றும் ஈகை குணம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இவர்களுடன் வாழ்வில் பயணிப்பது மிகவும் இனிமையான தருணமாகும். சாமர்த்தியசாலி மற்றும் படைப்பாற்றல் கொண்ட இவர்கள், தன்னை போன்ற வாழ்க்கை துணை வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.அறிவை அதிகம் மதிப்பார்கள், தனது மனதுடன் போட்டியிடும் துணையை அதிகம் எதிர்பார்ப்பார்கள். மந்தமான, அலுப்பை உண்டாக்கும் உறவில் இருந்து ஒதுங்கி இருக்க அதிகம் விரும்புவார்கள்.

ரிஷப ராசி:

ரிஷப ராசிப் பெண்கள் மிகவும் அர்ப்பணிப்பு தன்மைக் கொண்டவர்கள். தனது துணையை விட எதுவுமே இவர்களுக்கு பெரிதல்ல. ரிஷப ராசிப் பெண்கள் பதிபக்தி நிறைந்தவர்கள்.எல்லா ராசியினரையும் விட இவர்கள் ஒரு படி மேலே சென்று, தனது கணவருக்கு ஏற்ற விதத்தில் தங்கள் குணத்தையும் மாற்றிக் கொள்ளும் பண்புடையவர்கள். இவர்கள் மிகவும் அறிவாளி, தங்கள் கணவருடன் எல்லாவற்றிலும் கைகோர்த்து செல்லும் திறமை உள்ளவர்கள். உடல் தேவை மட்டுமே வாழ்வில் திருப்தி தராது என்று நம்பும் குணமுள்ளவர்கள் இவர்கள்.மனதிருப்தி வாழ்வில் மிகவும் முக்கியம் என்று நினைப்பவர்கள். இவர்கள் குடும்பத்தினர் மற்றும் நெருங்கியவர்களுக்கு மிகவும் விசுவாசமுள்ளவராக இருப்பார்கள். அவர்களைப் பாதுகாப்பதில் சிறந்து விளங்குவார்கள். இவர்களைப் போன்ற ஒரு சிறந்த தாய் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

துலாம் ராசி:துலாம் ராசியைச் சேர்ந்த பெண்கள் மிகவும் அன்பானவர்கள் மற்றும் உணர்ச்சி மிக்கவர்கள். அவர்கள் மிகவும் மகிழ்ச்சியானவர்கள். நீங்கள் கடந்து வரும் மனிதர்களில் மிகவும் நேர்மறை எண்ணம் கொண்டவர்கள் இந்த ராசி பெண்கள்.துலா ராசிப் பெண்கள் வாழ்வில் நல்லிணக்கத்தை விரும்புவதால், எந்த ஒரு பிரச்சனையையும் சரியான முறையில் கையாண்டு அதனை தீர்க்க முயற்சிப்பார்கள். வெற்றி பெற்ற ஒவ்வொரு ஆணின் பின்னால் ஒரு பெண் இருப்பாள், அந்த பெண் பெரும்பாலும் துலாம் ராசியை உடையவளாக இருப்பாள்.ஏனென்றால் துலாம் ராசிப் பெண்கள் சிறந்த சிந்தனையாளர்கள், தங்கள் கணவன் வாழ்வில் வெற்றி பெற அவரை ஊக்குவிப்பார். இவர்கள் சிறந்த காதல் குணம் கொண்டவராகவும் இருப்பார்கள்.இவர்களின் காதல் தான் இவர்களின் வலிமை. தங்கள் கணவரை அதிகம் நேசிப்பார்கள் . துலாம் ராசிப் பெண்கள் தங்கள் விரும்பும் ஒன்றைப் பெறுவதற்காக அன்பு என்னும் ஆயுதத்தை மட்டும் பிரயோகிக்கின்றனர். அவதூறு அல்லது தரக்குறைவாக தனது கணவரைப் பேசி தான் விரும்பும் ஒன்றை பெறுவதற்கு இவர்கள் போராடுவதில்லை.வாழ்வில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் விரும்பும் இவர்கள், திருமண பந்தத்தை வெற்றிப் பாதையை நோக்கி இட்டுச் செல்ல மட்டுமே விரும்புகின்றனர்.

மீன ராசி:மீன ராசி பெண்கள் மிகவும் நம்பகத்தன்மை மற்றும் விசுவாசம் நிறைந்தவர்கள். இந்த இரண்டு குணங்களும் எந்த ஒரு கணவனும் தன் மனைவியிடம் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்களாகும்.தன்னை சார்ந்தவர்கள் துயரப்படாமல் இருக்க கடின உழைப்பை இவர்கள் வெளிகாட்டுவார்கள். மன்னிக்கும் தன்மை அதிகம் உள்ள மீன ராசி பெண்கள் அனைவருக்கும் இரண்டாம் வாய்ப்பை வழங்க தயாராக இருப்பார்கள்.தொடக்கத்தில் தனது துணையைப் பற்றி தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் சிறிது காலம் எடுத்துக் கொள்வார்கள், அந்த நிலையைக் கடந்த பின், அவர்களின் முழு அன்பையும் காதலையும் தங்கள் துணையிடம் வெளிபடுத்தத் தொடங்குவார்கள்.கூடுதலாக, இவர்கள் படைப்பாற்றல் மற்றும் புத்திகூர்மை உடையவர்கள். அடிக்கடி மனநிலை மாற்றம் பெறக் கூடியவராக இருந்தாலும், இவர்களின் மற்ற நல்ல குணங்கள் இந்த மனநிலையை மறைத்து விடும். சின்னச் சின்ன விஷயங்களையும் வாழ்வில் இவர்கள் ரசிப்பார்கள். ஒரு அருமையான ஆடவனுக்கு ஒரு சிறப்பான துணையாக இவர்கள் அமைவார்கள்.

error

Enjoy this blog? Please spread the word :)