புதினங்களின் சங்கமம்

நல்லூர், யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த 13 பேர் மணற்காட்டில் கைது!

மூன்று வாகனங்களில் யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதிக்குச் சென்று சவுக்கங்காட்டில் சவுக்கு மரங்களை வெட்டி வாகனங்களில் ஏற்றிய 13 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனனர்.

அந்தப் பகுதி மக்கள் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பருத்தித்துறைப் பொலிஸார் சற்று முன்னர் அவர்களை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையம்கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

தொடர்ந்தும் விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் விபரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.