புதினங்களின் சங்கமம்

அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று! ஐ.நாவிடம் முறையிட்டார் கஜேந்திரகுமார்!

மகசீன் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 64 பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் குடும்பத்தார் தன்னுடைய கவனத்திற்கு கொண்டுவந்ததன் அடிப்படையில் தனக்கு குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதாக தெரிவித்த கஜேந்திரகுமார்,

அரசியல் கைதிகள் போதிய மருத்துவ மற்றும் சுகாதார வசதிகளுடன் இல்லை என்றும் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஐ.நா உயர்ஸ்தானிகராலயத்தினைக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மகசீன் சிறைச்சாலையில் நேற்று வரை தொற்றுக்குள்ளானவர்களே 64 பேர் என்றும் இன்று கிடைக்கப்பெற்ற பிசிஆர்பரிசோதனை முடிவுகள் குறித்து இதுவரை தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.