புதினங்களின் சங்கமம்

சாய்ந்தமருதுவில் தொடர்ந்து தாக்குதல் நடக்கின்றது!! இரு வீடுகள் எரிகின்றன!! படையினர் சிலரும் பலி??

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்பொழுதும் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுவருவதாக எமது அம்பாறை மாவட்டச் செய்தியாளர் குமணன் கூறுகிறார்.

இதுதொடர்பாக களத்திலிருந்து அவர் எமக்கு வழங்கிக்கொண்டிருக்கும் தகவலினடிபடையில்,

அம்பாறை சாய்ந்தமருது சுனாமி வீட்டுத் திட்டம் பகுதியில் தற்பொழுது இரண்டு வீடுகள் எரிந்துகொண்டிருப்பதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்.

பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக கூறப்படும் இந்த வீடுகள் குண்டுவெடிப்பின்மூலம் தகர்க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

அத்துடன் அப்பகுதியில் தொடர்ந்தும் துப்பக்கி வேட்டுகளின் சத்தம் கேட்டவண்னமிருப்பதாக செய்தியாளர் குமணன் கூறுகிறார்.

தற்பொழுது உடன் அமுலுக்கு வரும்வகையில் அங்கு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருப்பதுடன் ஊடகவியலாளர்கள் யாருமே உள்ளே செல்லமுடியாதளவுக்கு இராணுவத்தினர் வழிமறித்துள்ளதாக அவர் மேலும் கூறுகிறார்.

இதுதொடர்பான உடனுக்குடன் செய்திகளை அறிய தொடர்ந்தும் எமது செய்திச் சேவையுடன் இணைந்திருங்கள்..