புதினங்களின் சங்கமம்

ஆவா குழுவையும் அடக்கிவிட்டோம்!! இனி தமிழர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை!! கூறுவது யார்?

ஆவா குழுவை வடக்கில் அடக்கியிருக்கிறோம். இதற்கு பின்னரும் தமிழ் மக்களுக்கு என்ன தேவை?
என கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் விமல் வீரவங்ச தமிழ் மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என
கூறியுள்ளார்.

பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு
கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

அண்மையில் அமொிக்க துாதுவரை சந்தித்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன்
தமிழ் மக்களை காப்பாற்றுங்கள் என கேட்டிருக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டபாய தலமையிலான ஆட்சியில் தமிழ் மக்கள் பாதுகப்பாக உள்ளார்கள். கடந்த
ஆட்சிக்காலத்தில் வடக்கில் கொட்டமடித்த ஆவா குழுவை நாங்கள் அடக்கவிட்டோம். என கூறியுள்ளார்.