யாழ் நல்லுாரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா!! பரபரப்பில் நல்லுார்!!
யாழ்ப்பாணத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட குடும்பமொன்றே தொற்றிற்குள்ளானது.
சில தினங்களின் முன்னர் குடும்பத் தலைவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். திருநெல்வேலி
சந்தையுடன் தொடர்புடைய ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர்
முடிவுகள் இன்று வெளியாகின. இதில் குடும்ப உறுப்பினர்கள் மேலும் 5 பேர்
தொற்றிற்குள்ளாகியமை தெரிய வந்துள்ளது.
சற்று முன்னதாக மேலும் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் இவ்வாறு 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவ்ர இன்று (டிச-19) வெளியிட்ட நாளாந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
8.30 பி.பகல்.
இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 433 பேருக்கு PCR-19 பரிசோதனை செய்யப்பட்டன.
யாழில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இளவாலை – 1
மல்லாகம் – 1
அளவெட்டி – 1
இன்று முன்னதாக யாழ. பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடம் மற்றும் முல்லேரியா ஆய்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மருதனார்மடம் கொத்தணியில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

